தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா உடற்தகுதி பெறாமல் போனால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுலுக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பயிற்சியின்போது தொடையில் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோகித் சர்மா முதற்கட்ட உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அங்கு அவர் இறுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை உடற்தகுதி பெறாமல் ரோகித் சர்மா இந்த ஒருநாள் தொடரையும் தவறும்பட்சத்தில் அவருக்கு பதிலாக கே.எல் ராகுலுக்கு ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவி வழங்கப்படும் என்று பிசிசிஐ சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது, ஐபிஎல், விஜய் ஹசாரே தொடரில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் இடம் பெறலாம். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கடைசியாக 2017ல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். ஒருவழியாக சமீபத்திய 'டி-20' உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டதால் மீண்டும் அஷ்வின் பக்கம் அதிர்ஷ்டம் வீசலாம்.
இதையும் படிக்க: தெ.ஆ.வுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sEKcIaதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா உடற்தகுதி பெறாமல் போனால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுலுக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பயிற்சியின்போது தொடையில் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோகித் சர்மா முதற்கட்ட உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அங்கு அவர் இறுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை உடற்தகுதி பெறாமல் ரோகித் சர்மா இந்த ஒருநாள் தொடரையும் தவறும்பட்சத்தில் அவருக்கு பதிலாக கே.எல் ராகுலுக்கு ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவி வழங்கப்படும் என்று பிசிசிஐ சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது, ஐபிஎல், விஜய் ஹசாரே தொடரில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் இடம் பெறலாம். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கடைசியாக 2017ல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். ஒருவழியாக சமீபத்திய 'டி-20' உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டதால் மீண்டும் அஷ்வின் பக்கம் அதிர்ஷ்டம் வீசலாம்.
இதையும் படிக்க: தெ.ஆ.வுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், தவானுக்கு வாய்ப்பு?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்