கடந்த ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்பட்ட 48,84,700 சொச்சம் நகை கடன்களில், 35,37,693 மட்டுமே நகை கடன் தள்ளுபடி பெற தகுதியற்றவர்கள் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48 லட்சம் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டிருக்கும் அரசாணையில், சலுகையை பெற முடியாதவர்கள் யார் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி 2021 கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘40 கிராமுக்கு மேல் வைத்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது; ஆதார் எண்ணை தவறாக கொடுத்தவர்கள் குடும்ப அட்டை எண் நகை வைக்கும்போது கொடுக்க தவறியவர்கள் ஆகியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது; கூட்டுறவு சங்க நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது நகை கடன் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது; வெள்ளை நிற குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் மற்றும் உரிய காலத்தில் நகை கடன் திருப்பி செலுத்திவர்களுக்கு இந்த சலுகை இல்லை - போன்ற விஷயங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு மீதமுள்ள 13 லட்சம் பேருக்கு நகை திருப்பி வழங்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய செய்தி: 5 வது நாள் மார்கழியில் மக்களிசை: கிருஷ்ணா கான சபாவில் கொண்டாட்டமாக ஒலித்த கானா இசை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3z9GV4tகடந்த ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்பட்ட 48,84,700 சொச்சம் நகை கடன்களில், 35,37,693 மட்டுமே நகை கடன் தள்ளுபடி பெற தகுதியற்றவர்கள் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48 லட்சம் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டிருக்கும் அரசாணையில், சலுகையை பெற முடியாதவர்கள் யார் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி 2021 கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘40 கிராமுக்கு மேல் வைத்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது; ஆதார் எண்ணை தவறாக கொடுத்தவர்கள் குடும்ப அட்டை எண் நகை வைக்கும்போது கொடுக்க தவறியவர்கள் ஆகியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது; கூட்டுறவு சங்க நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது நகை கடன் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது; வெள்ளை நிற குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் மற்றும் உரிய காலத்தில் நகை கடன் திருப்பி செலுத்திவர்களுக்கு இந்த சலுகை இல்லை - போன்ற விஷயங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு மீதமுள்ள 13 லட்சம் பேருக்கு நகை திருப்பி வழங்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய செய்தி: 5 வது நாள் மார்கழியில் மக்களிசை: கிருஷ்ணா கான சபாவில் கொண்டாட்டமாக ஒலித்த கானா இசை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்