சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் ஒமைக்ரான் வகை வைரஸ் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளும், வரும் பயணிகளும் கொரோனா ரேபிட் சோதனை எடுக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் கவலை தரக்கூடிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. B.1.1.529 என மரபணு ரீதியாக அழைக்கப்படும் ஓமைக்ரான் வகை வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மரபணு ரீதியாக உருமாற்றம் அடைந்த வைரஸ்களை விட அதிக தீவிரத்துடன் பரவும் வைரஸ் என்பதால் தென்னாபிரிக்காவில் இருந்து விமான சேவையை ஜப்பான் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஹாங்காங், இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பங்களாதேஷ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கண்டிப்பாக RT PCR சோதனை எடுக்கப்பட வேண்டும் என விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் ரேபிட் டெஸ்ட் எடுப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரேபிட் சோதனை முடிவுகள் 45 நிமிடங்களில் வெளிவரும் நிலையில் நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே பயணிகள் வீட்டிற்கு செல்ல முடியும், வீட்டிற்கு செல்லும் பயணிகளும் தனி அறையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரேபிட் சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக விமான நிலையத்தில் இருக்கும் ஐ சி எம் ஆர் அதிகாரிகள் உடனடியாக பயணியை அழைத்துச் சென்று கொரோனாவின் மரபணு குறித்த விரிவான RT PCR சோதனை நடத்துவர் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழு ஓமைக்ரான் தொடர்பான கண்காணிப்பில் ஈடுபடும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் சிறப்பு அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் வீட்டின் முகவரி உள்ளிட்ட முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்கிறார்கள் அவர்களுக்கு எட்டு நாட்களுக்குப் பிறகு சோதனை எடுப்பதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். மேலும் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் அனைத்து பயணிகளும் 2 டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்