நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி கல்வி பயின்று வரும் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாணவிகளின் மேற்பார்வையாளர் மற்றும் விடுதியில் உள்ள 114 க்கும் மேற்பட்டவர்களை சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு, தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் தொற்று பரவலும் சற்று உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பதால், மாணவர்களுக்கும் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது.
குன்னூர் பெட்போர்டு பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தி வரும் விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது ஆர்டி-பிசிஆர் சோதனை செய்த போது 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் சுகாதார துறையினர், நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று அப்பகுதியை தனிமைப்பபுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒரு பணியாளருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற 5 பணியாளர்கள் மற்றும் 114 மாணவிகள் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்க்கொள்ளப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்