ராஜஸ்தானில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி ஒருவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரத்பூர் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜிதேந்திர சிங் கோலியா என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். டென்னிஸ் விளையாட்டு அரங்கு ஒன்றில் அறிமுகமான 14 வயது சிறுவனை நீதிபதியும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நீதிபதி ஜிதேந்திர சிங் கோலியா மீதும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார் வன்கொடுமை தடுப்புச்சட்டமான போக்சோ சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்கு ஆளான நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைப்படிக்க...காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினிகாந்த்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்