திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியான சைனிக் பள்ளியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 95 பேர் கடந்த 40 நாட்களாக பள்ளி விடுதியில் தங்கி நேரடி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: 19 மாதங்களுக்குப் பிறகு வகுப்பறைக் கற்றலில் மாணவர்கள்; வரவேற்க தயாரான பள்ளிக்கூடங்கள்
உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் அவரவர் பெற்றோர் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்