தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாகவே அதீத மழை பொழிவு இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே இரவில் சுமார் 20 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.
அடுத்த சில நாட்களில் கூடுதலாக மழை இருக்கும் என வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. இதனை எதிர்கொள்ள எந்தெந்த விஷயங்களில் தயாராக இருக்க வேண்டி உள்ளது?
நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் ‘தொடரும் பெருமழை.. வடியாத தண்ணீர்.. எங்கே தவறு? என்ன தீர்வு?’ என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
“இந்த மாமழை பொழிவு வழக்கமாக நடக்கின்ற ஒரு நிகழ்வு தான். இந்த அதீத மழை சார்ந்த கடந்த கால வரலாற்றை பார்த்தோமானால் 1977, 1985, 2005, 2015, இப்போது 2021 என சுழற்சி முறையில் பொழிந்து வருகின்ற மழை. இருந்தாலும் எவ்வளவு மழை பொழிவு இருக்கும் என்பதை துல்லியமாக கணித்து சொல்ல முடியாது என வானிலை ஆய்வறிஞர்கள் சொல்கின்றனர். ஏனெனில் வானிலை நிகழ்வில் இருந்து வரும் நிலையற்ற தன்மையை அவர்கள் காரணம் காட்டுகின்றனர். இதற்கு பிரதான காரணமாக காலநிலை மாற்றம் என சொல்லப்படுகிறது. அதனால் தான் புயல், சூறாவளி மாதிரியானவற்றின் பாதிப்புகளை 48 மணி நேரத்திற்கு முன்னதாக கணித்து சொல்ல முடியவில்லை எனவும் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் 230 முதல் 240 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனை இப்போது பெரிய அளவில் நாம் பேச காரணம் சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தினால் தான். ஆனால் முன்பு நான் சொன்னதை போல 1977 முதல் 2021 வரையில் சுழற்சி மழையில் பொழிந்துள்ள மழையின் அளவு கிட்டத்தட்ட ஒன்றாக தான் உள்ளது. ஆனால் அதன் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையை ஒப்பிடும் போது 1977-இல் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அப்போது பதிவானது இதே மழை அளவு தான்.
இப்போது இது மாதிரியான பாதிப்புகள் ஏற்பட காரணம் நகரப்பகுதியில் அதிகரித்துள்ள மக்கள் தொகை. 1977-இல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 12000 முதல் 13000 வரை இருந்த மக்கள் தொகை தற்போது 32000 முதல் 33000 என அதிகரித்துள்ளது.
இருக்கின்ற இடங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவை தான் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் இதற்கு காரணம். நகரமயமாக்கலின் விளைவு இது.
இருந்தாலும் மழை காலங்களில் வெள்ள நீர் வடியும் வகையில் பல்லாயிர கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள வெள்ள வடிகால் வசதிகள் அனைத்துமே அறிவியல் பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு கட்டியது அல்ல. தாழ்வான பகுதிகள், மேடான பகுதி என புவியியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளாமல் வெள்ள வடிகால் வசதிகளை கட்டியது தான் வெள்ள நீர் வடியாமல் இருப்பதற்கு காரணம். ஒரு தொலைநோக்கு பார்வையே இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இது.
சென்னையை போன்ற மாநகரத்தில் நகர்ப்புற அடிப்படை கட்டமைப்புகள் சார்ந்த சரியான புரிதல் இல்லாதது இந்த சிக்கல் எழ காரணம். அறிவியல் பூர்வமான திட்டத்தைக் கொண்டு இதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு ஒரு கமிட்டி அமைத்து இதை அறிவியல் பூர்வமாக அணுகினால் அடுத்த சில ஆண்டுகளில் தீர்வு காணலாம்” என தெரிவித்துள்ளார்.

#நேர்படப்பேசு

மழையை துல்லியமாக கணிக்க முடியாதது ஏன்? - எஸ்.ஜனகராஜன் ( நீரியல் நிபுணர் ) விளக்கம் #ChennaiRains | #Weather | #NorthEastMonsoon | #TamilNadu | #Nerpadapesu pic.twitter.com/5eYLLwveLE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 8, 2021

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்