பாரதிய ஜனதா மற்றும் அதனை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இன்றும் மரியாதை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருக்கிறார். காங்கிரஸின் வெற்றிக்குப் பின்னால் ஒரு புதிய காற்று வீசுவதாகவும், அது வலிமையையும் வேகத்தையும் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காற்று எந்தப் பக்கம் வீசும் என்றும் வினவியுள்ளார். 30 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய பகுப்பாய்வு சிந்தனையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட சிதம்பரம், அதில் 7 இடங்களிலும், அதன் அறிவிக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் 8 தொகுதிகளிலும் வென்றதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் 8 இடங்களிலும், பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையும் படியுங்கள்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்