ஒரு லட்சத்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை சந்தைகளுக்கு கூடுதலாக விடுவித்ததன் மூலம் அதன் விலை கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வழக்கமான வினியோகத்துடன் கூடுதலாக கையிருப்பில் இருந்த வெங்காயத்தை விடுவித்ததாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இவை தவிர மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள உள்ளூர் சந்தைகளுக்கு கிலோவுக்கு 21 ரூபாய் என்ற விலையில் வெங்காயத்தை வினியோகித்ததாகவும் நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 5 முதல் 12 ரூபாய் வரை குறைந்துள்ளது என மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்