தருமபுரி அருகே ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ''12.11.21 தேதியில், அதிகாலை 3:50 மணியளவில், ரயில் எண் 07390 கண்ணூர் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் பெங்களூரு பிரிவின் தோப்புரு - சிவாடி இடையே தடம் புரண்டது. முதலாவதாக, B1, B2 (3வது ஏசி), S6, S7, S8, S9, S10 (ஸ்லீப்பர்) பெட்டிகளில் திடீரென பாறாங்கற்கள் விழுந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம். டிஆர்எம் பெங்களூரு ஸ்ரீ ஷ்யாம் சிங், மூத்த அதிகாரிகளின் பிரிவுக் குழுவுடன், விபத்து நிவாரண ரயில் (ஏஆர்டி) மற்றும் மருத்துவ உபகரண வேனுடன் அதிகாலை 4.45 மணிக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஈரோட்டில் இருந்து ஏஆர்டியுடன் டிஆர்எம் சேலம் குழுவினரும் அதிகாலை 5.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
ரயிலிருந்த 2348 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். உயிர்ச்சேதம்/காயம் எதுவும் பதிவாகவில்லை. மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. பின்பக்க 7 பெட்டிகளின் பாதிப்பில்லாத பகுதி, பயணிகளுடன் சேலம் நோக்கி நகர்ந்து சிறப்பு ரயிலில் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு சென்றது. இது தொப்பூரில் நிறுத்தப்படும். பயணிகளின் வசதிக்காக தொப்பூரில் 15 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் 5 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3 பெட்டிகளின் முன்பகுதி தருமபுரிக்கு மாற்றப்படுகிறது.
தருமபுரி, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சஞ்சீவ் கிஷோர் தலைமையிலான மூத்த அதிகாரிகள், பொது மேலாளர், ஸ்ரீ பி கே மிஸ்ரா கூடுதல் பொது மேலாளர், ஸ்ரீ எஸ்பிஎஸ் குப்தா முதன்மை தலைமைப் பொறியாளர், ஹூப்பள்ளி தலைமையக பேரிடர் மேலாண்மைப் பிரிவில், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3CdStnbதருமபுரி அருகே ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்