Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சென்னை கனமழை - 4,810 பேர் மீட்பு; 87 முகாம்களில் தங்கவைப்பு

வெள்ளம் சூழ்ந்த மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த 4,810 நபர்கள் மீட்கப்பட்டு 87 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ளது. சென்னை காவல்துறையின் 13 காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர், மற்றும் மாநகாரட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

image

மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.சென்னை பெருநகர் வடக்கு மண்டலத்தில் ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடம், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கெனால் தெரு, சமுதாய நலக்கூடம், எம்எம் காலனி பகுதியில் உள்ள எவர்வின் பள்ளி, கிழக்கு மண்டலத்தில் வேப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு மண்டலத்தில் புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள சமுதாயநலக்கூடத்திலும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கன்னிகாபுரம், தாஸ் நகர் மாநாகராட்சி நடுநிலைப்பள்ளி, தெற்கு மண்டலத்தில் சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, செம்மஞ்சேரி காவல் நிலை எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 87 தற்காலிக முகாம்களில் 1,844 ஆண்கள், 1,963 பெண்கள், 994 குழந்தைகள், 9 திருநங்கைகள் என மொத்தம் 4,810 நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3qsortX

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்