கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளால், மக்கள் பலருக்கு 2 ரொட்டிகள் கிடைப்பதில் கூட சிரமம் இருப்பதால் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. பின்னர் இரண்டாம் அலையின்போது இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை மேலும் நீட்டிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார். கொரோனா பெருந்தொற்றினால் வேலையின்மை அதிகரித்திருப்பதால், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3qf8qYcகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளால், மக்கள் பலருக்கு 2 ரொட்டிகள் கிடைப்பதில் கூட சிரமம் இருப்பதால் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. பின்னர் இரண்டாம் அலையின்போது இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை மேலும் நீட்டிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார். கொரோனா பெருந்தொற்றினால் வேலையின்மை அதிகரித்திருப்பதால், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்