தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து புகார் அளிப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலவுவதாகவும் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதிமுக ஏற்கனவே குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி முறையிடுவார் எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல உள்ளனர்.
இதையும் படியுங்கள்: நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vwiVae

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்