நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லக்கிம்பூர் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்த கார் மோதியதில் விவசாயிகள் இறந்ததாகவும், இதுவே பின்னர் வன்முறையாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவ்விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி 2 வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. இச்சூழ்நிலையில் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு அமைப்பு 6 புகைப்படங்களை வெளியிட்டு, அதில் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்