'இல்லம் தேடி கல்வி திட்டம்' இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்று வரும் ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா,ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் குறித்து அக்டோபர் 2ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன்,அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில், முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு இன்று மாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3FSOakq'இல்லம் தேடி கல்வி திட்டம்' இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்று வரும் ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா,ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் குறித்து அக்டோபர் 2ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சருடன்,அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில், முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு இன்று மாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்