''அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது என்ற வதந்தியை பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு. அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்துகிறோம்''என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என கூறி பலரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கடந்த 5வது முகாமை பொறுத்தவரை 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது. சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vmjtPA''அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது என்ற வதந்தியை பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு. அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்துகிறோம்''என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என கூறி பலரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கடந்த 5வது முகாமை பொறுத்தவரை 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது. சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்