பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலை ஏற்றத்துக்கு மத்திய அரசின் பேராசையே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் தமிழ் வர்த்த சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற அவர், வரிவிதிப்பு என்பது ஒரு எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஒரே பொருளின் மீது 33 சதவிகித வரியை விதிப்பது தவறானது என சாடினார்.
பல காரணங்களால் உலக வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், மக்களின் கடன் சுமை அதிகரித்திருப்பதும், தனிமனித சேமிப்பு குறைந்திருப்பதும் நாட்டுக்கே ஓரு எச்சரிக்கை மணி என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்