இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக, இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா பலமுறை வென்றிருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாகிஸ்தானை எளிதாக கருத இயலாது என்றார். மேலும், இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களின் உடல்தகுதியில் பின்னடைவு உள்ள நிலையில், பந்து வீச்சுக்கு ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருவதாக கோலி தெரிவித்தார்.

டி20 போட்டிகளே வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்துபவையாக மாறியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான இன்றைய போட்டி உச்சகட்ட பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3Cbxv9B

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்