தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரியான அணுகுமுறைதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சியாகி விட்டது, கோட்பாட்டின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிதான் எதிர்க்கட்சி” என தெரிவித்தார்
தக்கலையைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியில் 'தமிழர் வீரக் கலைப் பாசறை' என்ற புதிய பிரிவை சீமான் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வழிபாட்டுத் தலங்களைத் திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. எனவேதான் கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயிலும் அங்கேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார். கொரோனா குறைந்த பின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே, திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா?" என கேள்வி எழுப்பினார்.
இதனைப்படிக்க...தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகள் நகைச்சுவை ஆட்சி - “ஆச்சி” மனோரமா நினைவுநாள் இன்று…!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்