ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில், இந்திய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, மூனியின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 52 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்தார். எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்களில் தோல்வியடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்