காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் அக்கட்சியினர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக முறையிட உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்க உள்ளனர். அப்போது அவர்கள், லக்கிம்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தை அளிக்க உள்ளனர். அதே நேரத்தில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: ''மனித உரிமைகள் விவகாரத்தில் பாரபட்ச அணுகுமுறை கூடாது' - பிரதமர் மோடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lAp41Hகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் அக்கட்சியினர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக முறையிட உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்க உள்ளனர். அப்போது அவர்கள், லக்கிம்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தை அளிக்க உள்ளனர். அதே நேரத்தில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: ''மனித உரிமைகள் விவகாரத்தில் பாரபட்ச அணுகுமுறை கூடாது' - பிரதமர் மோடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்