அனல் மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய முழு வீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி வினியோகம் தற்போது 19 லட்சத்து 50 ஆயிரம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சில நாட்களில் இது 20 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதற்கு முன் இந்தளவு நிலக்கரி வினியோகம் நடந்ததில்லை என கருதுவதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
சுரங்கப் பகுதிகளில் பருவமழை ஓய்ந்து விட்டதால் இனிவரும் நாட்களில் நிலக்கரி உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என நம்புவதாகவும், மின்வெட்டு ஏற்படாத அளவுக்கு நிலக்கரி வினியோகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3atEPkGஅனல் மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய முழு வீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி வினியோகம் தற்போது 19 லட்சத்து 50 ஆயிரம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சில நாட்களில் இது 20 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதற்கு முன் இந்தளவு நிலக்கரி வினியோகம் நடந்ததில்லை என கருதுவதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
சுரங்கப் பகுதிகளில் பருவமழை ஓய்ந்து விட்டதால் இனிவரும் நாட்களில் நிலக்கரி உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என நம்புவதாகவும், மின்வெட்டு ஏற்படாத அளவுக்கு நிலக்கரி வினியோகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்