கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றதை கொண்டாடியதுடன் இந்தியாவை இழிவாக பேசியதாக கூறி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது. அப்போது பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதுடன் இந்தியா பற்றி அவதூறு பதிவுகளை இட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அந்தப் பள்ளி ஆசிரியர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் உட்பட 5 பேர் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் நாட்டை பற்றி அவதூறாக பதிவிட்டது, தேசத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியது உள்ளிட்ட காரணங்களுக்காக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே குற்றச்சாட்டில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவை இழிவுபடுத்தியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி காஷ்மீரிலும் பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மகாராஷ்டிரா: ரூ37 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு விஷப்பாம்பை விட்டு கொலை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்