Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பயங்கரவாத எதிர்ப்பு திட்டத்தை பிரிக்ஸ் ஏற்கிறது - பிரதமர் மோடி

https://ift.tt/2Vtp5dp

ஆப்கானிஸ்தானில் அமைதிக்கு வழிவகுக்கும் தீர்மானம் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய 5 நாடுகளின் அமைப்பான பிரிக்சின் 13-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஏற்றுக் கொள்வதாக கூறினார். வன்முறையிலிருந்து விலகி அமைதியான முறையில் நிலைமையை சரிசெய்ய ஆப்கானிஸ்தானுக்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், ஆப்கானிஸ்தானில் நிலையான தன்மை, அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை உறுதி செய்ய உள்நாட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
 
image
மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கியதே அங்கு புதிய பிரச்னை உருவாக முக்கிய காரணம் என்றார். இது உலக நாடுகளின் பாதுகாப்பை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் இருந்து உலக நாடுகள் விலகி நிற்பதாகவும், அவர்களது இறையாண்மையை மதிப்பதாகவும் புதின் தெரிவித்தார். அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்