தங்களை பொருத்தவரை ஒவ்வொரு இந்தியனும் இந்துதான் என்று தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ''இந்து என்பது எந்த இனம், மதம் அல்லது மொழி அடையாளத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இந்து என்பது அனைத்து தரப்பினரின் உயர்வுக்காக பாடுபடும் ஒரு வளமான பாரம்பரிய பெயர் ஆகும். ஆகவே, எங்களை பொருத்தவரை ஒவ்வொரு இந்தியனும் இந்துதான். ஆக்கிரமிப்பாளர்கள் மூலமாகவே இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது. நல்ல முஸ்லீம் தலைவர்கள் தேவையற்ற விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அடிப்படைவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும்.
இதை நாம் எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ அந்த அளவு சமூகத்தில் குறைவான சேதத்தை ஏற்படுத்தும். நாங்கள் ஒன்றல்ல, தனித்தனியானவர்கள் என நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறவர்கள் கூற முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருவரும் இரையாகக் கூடாது. நாம் ஒரே நாடாக நாம் எப்போதும் ஒன்றுபட்டு இருப்போம். ஆர்எஸ்எஸ்ஸில் நாங்கள் இதைத்தான் நினைக்கிறோம், இதை உங்களுக்கு தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
மேலும், இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது பிரிட்டீஷ்காரர்களே என மோகன் பகவத் கூறியுள்ளார். அதுகுறித்து பேசுகையில், “இந்துக்களுடன் வாழ்ந்தால் இஸ்லாமியர்களுக்கு எதுவும் கிடைக்காது என பிரிட்டீஷ்காரர்கள் கூறி, நாட்டை பிரிக்கும்படி இஸ்லாமியர்களை தூண்டினர். இதேபோல் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என இந்துக்களிடம் கூறி இரு தரப்புக்கிடையே மோதலை ஏற்படுத்தினர். இதன் விளைவாகவே இரு தரப்பிடையே மோதலும் நம்பிக்கையின்மையும் ஏற்பட்டது. இது தொடர்பான நமது பார்வையை மாற்றவேண்டும்” என மோகன் பகவத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: 'தி ஆல்கமிஸ்ட்' எழுத்தாளரை கவர்ந்த கேரள ஆட்டோ! - வைரல் புகைப்படத்தின் பின்னணி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்