நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 10ஆம் தேதி முடிவு பெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்களின் விண்ணப்பகள் ஏற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் 198 நகரங்களில் இந்தாண்டு நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதேபோல், செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறயிருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கும் ஹால் டிக்கெட்டை nbe.edu.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: கல்விக்கடன் குறித்து விளம்பரப் பலகை: வங்கிகளுக்கு எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்