புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்வதில் இரு கட்சிகளும் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அண்மையில் பாஜக மூன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெற்று, தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்தது. ஆனால், பதிலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் மூன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தை ஒதுக்கீடு செய்யும் முழு அதிகாரத்தை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு அளித்ததாக தெரிகிறது. இதனால் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளார். அங்கிருந்து பாஜக தலைமை நிர்வாகிகள் மூலம் முதலமைச்சர் ரங்காசமியிடம் சமாதானம் பேசப்படலாம் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lFYhjnபுதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளரை முடிவு செய்வதில் இரு கட்சிகளும் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அண்மையில் பாஜக மூன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெற்று, தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்தது. ஆனால், பதிலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் மூன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தை ஒதுக்கீடு செய்யும் முழு அதிகாரத்தை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு அளித்ததாக தெரிகிறது. இதனால் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளார். அங்கிருந்து பாஜக தலைமை நிர்வாகிகள் மூலம் முதலமைச்சர் ரங்காசமியிடம் சமாதானம் பேசப்படலாம் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்