மைக்கேல் மதன காமராஜன் படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ’பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ பாடலும், ’பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’, 'கத கேளு, கத கேளு சுகமான கத கேளு’ பாடலும் இப்போதும் தமிழக மக்களின் ஃபேவரிட்டாக உள்ளன.
இதில், சமீபத்தில் வெளியான சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடலை மட்டும் எடுத்து பயன்படுத்தியிருந்தார், இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இப்பாடல் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ள நிலையில் ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில், இப்பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்துகொள்ளும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
வீடியோவில், ’சிங்கீதம் சீனிவாசராவும் கமல் சாரும் இப்பாடல் கம்போசிங்கிறாக வந்து அமர்ந்தார்கள். வாலி அண்ணனும் இருந்தார். நான் இப்பாடலை ‘டட்டாட்ட டட்டாட்ட டட்டாட்ட டடடாட்ட’ என்றேன். ”என்னாயா இப்படி போடுற. இந்த மாதிரி சந்தம் எல்லாம் கொடுத்தா எப்படிய்யா எழுதறது?” என்று கேட்டார் வாலி அண்ணன். ’இது ஏற்கனவே எழுதனதுதாண்ணே’ என்றேன்.
#PerVachaalumHits10MillionViews Inside story about the original song composed by my Dad #MMK #vaali #Malaysiavasudaven #sjanaki @ikamalhaasan @khushsundar @iamsanthanam @SonyMusicSouth @kjr_studios @karthikyogitw @SoldiersFactory @OfficialAnagha @shirinkanchwala @ZEE5Tamil pic.twitter.com/eHa9BRcV4d
— Raja yuvan (@thisisysr) September 20, 2021
’அப்படியா யாருய்யா எழுதினது’ என்று கேட்டார். ’வள்ளுவர் எழுதிட்டுப் போயிருக்கார் என்றுக்கூறி ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்று பாடிக்காட்டி இதுதான் சந்தம் என்றேன். அதன்பிறகுதான் வாலி அண்ணன் ”பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’என்று எழுதினார். இந்தத் தகவலை உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இளையராஜா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்