ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசை சீனா அங்கீகரித்துள்ளது. இது தவிர ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், தடுப்பூசிகள் என 31 மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அக்கூட்டத்தில் சீனாவின் கருத்து வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் சீனா,பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதன் பின் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை தங்கள் நாடு வழங்கும் என தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தலிபான்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு அமைச்சர் பங்கேற்கவில்லை. இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்