தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்கக் கடல் பகுதியில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும், இதனால், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையால் பல நீர்நிலைகள் நிறைந்தன. கடலூர் மாவட்டம் முழுக்க பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். தாழ்வான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
இதையும் படியுங்கள்: முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3h5oGFUதமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்கக் கடல் பகுதியில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும், இதனால், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையால் பல நீர்நிலைகள் நிறைந்தன. கடலூர் மாவட்டம் முழுக்க பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். தாழ்வான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
இதையும் படியுங்கள்: முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்