புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் பூரில் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் விவசாய அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர். குறிப்பாக, இம்மாதம் 27ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வலியையும் பிரச்னைகளையும் உணர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தவேண்டும் என்றும் வருண் காந்தி தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் விவசாயிகளின் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படியுங்கள்: நீதித்துறை கடும் சாவல்களை எதிர்கொண்டுள்ளது: நீதிபதி என்.வி.ரமணா வேதனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3BP5kwDபுதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் பூரில் மகா பஞ்சாயத்து என்ற பெயரில் விவசாய அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர். குறிப்பாக, இம்மாதம் 27ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வலியையும் பிரச்னைகளையும் உணர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தவேண்டும் என்றும் வருண் காந்தி தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் விவசாயிகளின் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படியுங்கள்: நீதித்துறை கடும் சாவல்களை எதிர்கொண்டுள்ளது: நீதிபதி என்.வி.ரமணா வேதனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்