சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 688 சுங்கச் சாவடிகள் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 இடங்களில் சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 6,606 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கிலோமீட்டர் சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுங்கச் சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி, ஒரு வாகனம் சுங்கச் சாலையில் எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல் ஒரு சுங்கச் சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி 26 சுங்கச் சாவடிகளில் 5% முதல் 10 % வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மாநிலத்தில் மீதமுள்ள 21 சுங்கச் சாவடிகளில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஓமலூர், வீரசோழபுரம் (சேலம்), மேட்டுப்பட்டி (சேலம்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம் (குமாரபாளையம்), சமயபுரம் (திருச்சி), விக்கிரவாண்டி டோல்கேட் (விழுப்புரம்) திருமாந்துரை (பெரம்பலூர்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி) ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தருமபுரி - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் சுங்கச்சாவடியில் 10 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவர 95 ரூபாயிலிருந்து 105 ரூபாய் வரையிலும், பலமுறை சென்றுவர 155 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு 10 ரூபாய் கட்டணம் உயர்ந்து உள்ளது. அதே போல் இலகுரக வணிக மோட்டார் வாகனங்களுக்கு 170 ரூபாயிலிருந்து 185 ரூபாயாக கட்டணம் உயர்ந்துள்ளது.
கனரக வாகனம் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை சென்றுவர 340 இல் இருந்து 365 ரூபாயாகவும், பலமுறை சென்றுவர 550 ரூபாயாகவும் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆறு சக்கரங்கள் மற்றும் அதற்குமேல் சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு 545ல் இருந்து 590 ரூபாயாக கட்டணம் உயர்ந்துள்ளது. ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட தற்போது ரூ.5 முதல் ரூ.20 வரையில் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கும் வேலையில் சுங்க கட்டணமும் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வாகன உரிமையாளர்கள் கூறுகையில், ''கொரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகத்துறை, தொழில்துறை ஆகியவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையும் உயர்ந்துள்ளது. இதுபோன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 30 சதவீதம் லாரிகள் வாடகை கிடைக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.
ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்துத் துறைக்கான வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவீதம் வரை அதிகரித்து வரும் நிலையில், சுங்கச் சாவடிகளுக்கான வருவாய் அதிகரித்து வருகிறது. எனவே, சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் முடிவை பரிசீலித்து கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கட்டண உயர்வால், சரக்கு வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: டிடிவி.தினகரன் கண்டனம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்