Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜனவரி 2022 முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அமல் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

image

அதன்படி, ''தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்தால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்'' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது.  மேலும், போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் எனவும், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் பணிநீக்கம் காலம் வேலை நாட்களாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2WZzOx3

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்