Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு ஆறுதல் மட்டும் போதுமா? அவர்களுக்கு தேவைப்படுவது என்ன?

https://ift.tt/3yHV1tb

டோக்கியோ ஒலிம்பிக்கில் செம கெத்தாக விளையாடியுள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியிடம் இறுதி வரை போராடி தோல்வியை சந்தித்தது. 

image

அந்த தோல்விக்கு பிறகு களத்தில் விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள் மட்டுமல்லாமல் போட்டியை டிவியிலும், மொபைல் போனிலும், லைவ் நியூஸ் சைட்களிலும் கவனித்துக் கொண்டிருந்த இந்திய அணியின் கோடான கோடி சப்போர்டர்களும் ஒரு செகண்ட் கலங்கி இருப்பார்கள். எத்தனையோ முறை இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாடி இருந்தாலும் இந்த முறை மக்களை கொஞ்சம் எமோஷனலாக கனெக்ட் செய்ததே இதற்கு காரணம். 

அதற்கு பிறகு ‘சிங்கப் பெண்களே கலங்க வேண்டாம்’ என சமூக வலைத்தள இணைய வெளியில் பலரும் இந்திய வீராங்கனைகளுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். 

image

கலங்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி, வீராங்கனைகளிடம் தொலைபேசி மூலமாக உரையாடிய வீடியோ கூட வைரலாகி இருந்தது. 

அவர்களுக்கு ஆறுதல் மட்டும் சொன்னால் போதுமா? அவர்களுக்கு மெய்யாகவே தேவைப்படுவது தான் என்ன? என்பதை அலசுவோம். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம்!

சர்வதேச ஃபீல்ட் ஹாக்கி ரேங்கிங்கில் இந்திய மகளிர் அணி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணி தான் உலகமே உற்று நோக்கும் ஒலிம்பிக்கில் டாப் நான்கு அணிகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சரித்திர சாதனை மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் டாப் நான்கு அணிகளில் இதே நான்காவது இடத்தை பிடித்தது. 2016 ரியோவில் 12-வது இடத்தை பிடித்ததும் தான் ஒலிம்பிக்கில் மகளிர் அணி படைத்துள்ள சாதனை. 

2020 டோக்கியோ ஒலிம்பிக் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அணியால், அர்ஜென்டினாவை அரையிறுதியில் வீழ்த்த முடியவில்லை. இந்த நிலையில் தான் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. பிரிட்டன் அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள அணி. அப்படிப்பட்ட அணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவில்லை இந்தியா. 

முதல் கால் (Quarter) பகுதியில் 0 - 0 என இருந்த கோல் கணக்கு இரண்டாவது கால் பகுதியில் 3 - 2 என மாறியது. இதில் இந்தியா லீட் செய்தது. மூன்றாவது கால் பகுதியில் ஜெர்மனி ஒரு கோல் அடித்து கோல் கணக்கை சமன் செய்தது. நான்காவது காலில் மேலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தில் லீட் எடுத்தது ஜெர்மனி. இந்திய இந்த கடைசி 900 நொடிகளில் செய்த சில பிழைகளால் ஆட்டத்தை இழந்தது. 

இருப்பினும் இறுதி வரை கோல்களை நோக்கிய பாஸ்களை இந்திய வீராங்கனைகள் கடத்திக் கொண்டே இருந்தனர். பல போராட்டங்களையும், வலியையும், சாதிய வன்மத்தையும், இன வேறுபாட்டையும், இப்படி இன்னும் பிற தடைகளை உடைத்தே இந்த நிலைக்கு ஒன்றுபட்ட அணியாக வந்த அவர்களுக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு வெற்றி. (ஒலிம்பிக்கில் விளையாடிக் கொண்டிருந்த போதே சாதிய வன்மத்தை அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனை ஒருவர் எதிர் கொண்டதும் குறிப்பிடத்தக்கது). ஆனால் அது கூட வசமாகவில்லை. அந்த 22 கண்கள் கூட்டாக சேர்ந்து கண்ட கனவு தகர்ந்தது. அப்படிப்பட்ட தோல்விக்கு பிறகுதான் ஆறுதல்களை வெளிப்படுத்தி வருகிறோம். அதிகபட்சம் இந்த ஆறுதல்கள் அடுத்த 24 மணி நேரமோ அல்லது 48 மணி நேரமோ வரை நீடிக்கும். ஆனால் அதன் பின்பு மீண்டும் நம் வீராங்கனைகளின் நிலை என்ன?

image

இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்” என கனா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சொல்கின்ற வசனம் தான் நம் வீராங்கனைகளுக்கு தேவைப்பட்டது. அதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. அது என்ன?

விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் என்பது மிகவும் அவசியம். ஏனெனில் பயிற்சி பெறுவது, பயணம் மேற்கொள்வது, விளையாட்டு உபகரணங்களை வாங்குவது என அனைத்திற்கும் ஆகும் செலவுகளை செய்ய ஸ்பான்சர்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக வெற்றிகளை கொத்தாக குவித்து வரும் அணிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் தங்கு தடையின்றி கிடைக்கும்.  

image

இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்த சஹாரா ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதன் பின்னர் புதிய ஸ்பான்சர் கிடைக்கவில்லை. அப்போது தான் ஒடிசா மாநில அரசு இந்தியாவுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. தேசிய விளையாட்டுக்கு ஒரு மாநில அரசு ஸ்பான்சர் செய்தது ஆச்சரியமாக இணைந்து. அதற்கு காரணம் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக். அவரை போல நல்லுள்ளங்களை கொண்டவர்கள் தேசிய விளையாட்டை அரவணைத்து, ஊக்கம் கொடுத்து அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவியை செய்ய முன் வர வேண்டும். அதுவும் ஒரே ஒரு மாநிலம் உதவ முன்வந்ததற்கே இப்படி என்றால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எல்லாம் தேசிய விளையாட்டை அரவணைத்தால் நிலை என்ன ஆகும் என யூகித்து பார்த்தால். அது வேற லெவலாக இருக்கும். அதன் மூலம் ‘ஜெயிக்காதவன் சொன்னாலும் கேட்கும்’ என்பதை எதார்த்தத்தில் கொண்டு வந்து நம் வீராங்கனைகளுக்கு கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் வாய்ப்புக்காகவும், முறையான தளத்திற்காகவும் காத்து நிற்கின்ற ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்