Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘கால் ஒரு பக்கம் பேட் வேறொரு பக்கம்‘ - என்னாச்சு விராட் கோலி?

விராட் கோலிக்கும் இங்கிலாந்து ஆடுகளத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான் போலவே இருக்கிறது. ஆம் 2014 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது பேட்டிங்கில் எப்படி எல்லாம் சொதப்பினாரோ இப்போதும் அதேபோன்ற சொதப்பல் குழியில் சிக்கியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இங்கிலாந்து உடனான டெஸ்ட் மட்டுமல்ல சமீபத்திய டெஸ்ட் ரெக்கார்டுகள் விராட் கோலிக்கு சாதகமாக இல்லவே இல்லை என்பது கவலை தரும் விஷயமாக இருக்கிறது.

image

விராட் கோலியின் பிரச்னை என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்கம் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 42 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலி அவுட்டானது கூட பெரிய விஷயமல்ல, ஆனால் அவர் அவுட்டானவிதம்தான் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு  இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விராட் கோலி மிகப்பெரிய அளவில் சொதப்பினார். ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து 135 ரன்கள் மட்டுமே அவர் குவித்தார்.

image

ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து 2018-ஆம் ஆண்டு நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி 593 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் இம்முறையும் கோலி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக ரன் சேர்த்துக்கொண்டு இருக்கிறார் கோலி.

இது மட்டுமல்லாமல் கோலி கடைசியாக 2019-ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிராக சதமடித்தார். அதன்பின்பு 18 இன்னிங்ஸ் விளையாடிய கோலி 2 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். மொத்தம் 387 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பதால் கோலியின் பார்ம் மிகவும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

image

வழக்கமாக விராட் கோலி அவ்வளவு பெரிய அளவில் கிரீஸில் நகர்ந்து ஆட மாட்டார். ஆனால் இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சற்று அளவுக்கு அதிகமாக நகர்ந்து ஆடுகிறார். இதன் காரணமாகவே அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை என்று விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

மேலும் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பான யுக்தியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக விராட் கோலியை அவர்களது நோக்கத்தில் ஆட விட்டு பின்பு அவருடைய விக்கெட்டை எடுக்கின்றனர். திட்டம் தீட்டி எடுப்பதுபோல் விராட் கோலியின் விக்கெட்டை அவர்கள் கைப்பற்றும் விதம் அபாரமாக இருக்கிறது என்று கெரிவிக்கிறார் லக்ஷ்மன்.

image

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறும்போது "கால்களை நகர்த்தி விளையாடிதான் டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி. ஆனால் இம்முறை அதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அவர் முன் கூட்டிய பந்தை விரட்டியடிப்பதால் அவுட்டாகிறார். இம்முறை கால்கள் ஒரு பக்கமும் பேட் வேறொரு பக்கமும் செல்கிறது. இந்த தொடர் முழுவதும் அவர் அப்படிதான் விளையாடுகிறார். இந்த விஷயத்தை அவர் சரி செய்ய வேண்டும்" என்று யோசனை கூறியிருக்கிறார். ஆனாலும் நேற்றைய ஆட்டத்தில் தான் அவுட்டானவிதம் குறித்து மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் கோலி.

image

கோலிக்கு சறுக்கல்கள் புதிதல்ல, 2014 இல் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய பின்பு சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையை, தான் பெற்று ஆட்ட நுணுக்கத்தை மாற்றியமைத்ததாக கோலி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதேபோல இம்முறையும் அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களிடம் ஆலோசனைப் பெறலாம். சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை கோலி, அவர் இப்போதே பேட்டிங்கிலும் டெஸ்ட் கேப்டன்சியிலும் ஏராளமான சாதனைகளை செய்துவிட்டார். இந்தச் சறுக்கல் அவருக்கு தற்காலிகமானதுதான். அடுத்த போட்டியிலேயே கூட "கிங்" கோலி மீண்டும் பிறப்பார் என நம்பலாம்... நம்பிக்கை அதுதானே எல்லாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3yQL38N

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்