ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளை வீழ்த்தி தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அதிபர் அஷ்ரஃப் கனி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். ரத்தகளறி ஏற்படுவதை தடுக்கவே தான் வெளியேறியதாக கனி விளக்கம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கான பேச்சுகள் நடந்து வரும் நிலையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழமைவாத தலிபான்கள் ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாடுகளின் தூதர்கள் வெளியேறி வருகின்றனர். ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தவிர பிற நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன. குறிப்பாக அமெரிக்கா தங்கள் தூதரக அதிகாரிகளை ஹெலிகாப்டர்கள் மூலம் அவசர அவசரமாக மீட்டு விட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு மக்களும் தத்தமது நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
தற்போதைய சூழலில் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளாமல் தலிபான்கள் விட்டுவைத்துள்ளனர். இதற்கிடையே இந்தியாவிலுள்ள ஆப்கன் தூதரக ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக அதன் ஊடகப்பிரிவு செயலர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2UnAM4Yஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளை வீழ்த்தி தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அதிபர் அஷ்ரஃப் கனி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். ரத்தகளறி ஏற்படுவதை தடுக்கவே தான் வெளியேறியதாக கனி விளக்கம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கான பேச்சுகள் நடந்து வரும் நிலையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழமைவாத தலிபான்கள் ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாடுகளின் தூதர்கள் வெளியேறி வருகின்றனர். ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தவிர பிற நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன. குறிப்பாக அமெரிக்கா தங்கள் தூதரக அதிகாரிகளை ஹெலிகாப்டர்கள் மூலம் அவசர அவசரமாக மீட்டு விட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு மக்களும் தத்தமது நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
தற்போதைய சூழலில் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளாமல் தலிபான்கள் விட்டுவைத்துள்ளனர். இதற்கிடையே இந்தியாவிலுள்ள ஆப்கன் தூதரக ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக அதன் ஊடகப்பிரிவு செயலர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்