இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தொடர் 1 - 1 என சமனில் உள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ஐந்து இன்னிங்ஸில் 87 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்றாக அணியில் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாஹா இடம் பெற வேண்டும் என சொல்லி வருகின்றார்.
இந்நிலையில், நிச்சயம் பண்டுக்கு மாற்றாக அணியில் வேறு ஒருவர் இடம் பெற வேண்டும். ஆனால் அது சாஹா இல்லை என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
“நிச்சயம் இது கொஞ்சம் சவாலான காரியம் தான். இருந்தாலும் அணிக்காக கே.எல்.ராகுல் அதை செய்தாக வேண்டும். விக்கெட் கீப்பிங் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என இரண்டையும் அவர் கவனித்தாக வேண்டும். இதை ஒரு வாய்ப்பாக கருதி அவர் செய்தால் இந்திய அணி கூடுதலாக மேலும் ஒரு பேட்ஸ்மேன் உடன் விளையாடலாம். அது சூரிய குமார் யாதவாக கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார் ஹாக்.
இருந்தாலும் இது அடுத்த டெஸ்ட் போட்டியில் நடக்குமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார் ஹாக். இந்தியா அடுத்தப் போட்டியில் தோல்வியை தழுவினால் அந்த மாற்றம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mFE5QLஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த தொடர் 1 - 1 என சமனில் உள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ஐந்து இன்னிங்ஸில் 87 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்றாக அணியில் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாஹா இடம் பெற வேண்டும் என சொல்லி வருகின்றார்.
இந்நிலையில், நிச்சயம் பண்டுக்கு மாற்றாக அணியில் வேறு ஒருவர் இடம் பெற வேண்டும். ஆனால் அது சாஹா இல்லை என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
“நிச்சயம் இது கொஞ்சம் சவாலான காரியம் தான். இருந்தாலும் அணிக்காக கே.எல்.ராகுல் அதை செய்தாக வேண்டும். விக்கெட் கீப்பிங் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என இரண்டையும் அவர் கவனித்தாக வேண்டும். இதை ஒரு வாய்ப்பாக கருதி அவர் செய்தால் இந்திய அணி கூடுதலாக மேலும் ஒரு பேட்ஸ்மேன் உடன் விளையாடலாம். அது சூரிய குமார் யாதவாக கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார் ஹாக்.
இருந்தாலும் இது அடுத்த டெஸ்ட் போட்டியில் நடக்குமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார் ஹாக். இந்தியா அடுத்தப் போட்டியில் தோல்வியை தழுவினால் அந்த மாற்றம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்