மலையாள திரைப்படமான `நாயட்டு' ரீ- மேக் உரிமைகள் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு விற்பனை ஆகியுள்ளன. மூன்று மொழிகளிலும் பிரபலமானவர்கள் இந்தப் படத்தை எடுக்கவிருக்கின்றனர்.
இந்த வருடம் வெளியான மலையாள திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாகவும், பேசுபொருளாகவும் அமைந்தப் படம் நாயட்டு. குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகும் முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அதன் இயக்குநர் மார்டின் பிரகாட். முதல் படைப்பான `சார்லி' படத்துக்கு பிறகு நீண்ட வருடங்களுக்குப் பிறகு மார்டின் பிரகாட் இந்தப் படத்தை எடுத்திருந்தார். அதன்படி ஏப்ரல் 8ம் தேதி வெளியானது இந்தப் படம்.
காவல் துறைக்குள் நடக்கும் சம்பவங்கள், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், பட்டியலின மக்களின் வாக்குகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளும் விதம் என்று சமகால லாப அரசியலை அழுத்தமாக பதிவு செய்தது இந்தப் படம். ஓடிடியில் வெளியான இந்தப் படம் அரசியல் சர்ச்சைகளைத் தாண்டி பல்வேறு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இதனால் தற்போது இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட இருக்கிறது. தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தெலுங்கு ரீமேக் உரிமையை தெலுங்கு சினிமாவின் `ஸ்டைலிஷ் ஸ்டார்' என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் கைப்பற்றியுள்ளதாக படத்தின் இயக்குநர் மார்ட்டின் பிரகாட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது குடும்ப நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் மூலம் அல்லு அர்ஜுன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய அல்லு அர்ஜுன் தரப்பு ஏற்கெனவே இரண்டு இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் எனக் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தி ரீமேக் உரிமையை பிரபல நடிகரும், கேரளாவை பூர்வீகமாக கொண்டவருமான நடிகர் ஜான் ஆபிரகாம் கைப்பற்றி இருக்கிறாராம். தெலுங்கு, இந்தி விவரங்கள் இப்படி இருக்க, தமிழில் இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் உறுதியான வட்டாரங்கள் கெளதம் மேனன் இயக்க இருப்பதாக கூறுகின்றன. இதுவும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்