வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பிரபல தனியார் நிறுவனமான டிவிஎஸ், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சுற்றுச்சூழல் சார்ந்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஓசூரில் உள்ள தங்களது தொழிற்சாலை வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பில் 'SACRED FOREST' என்ற பெயரில் புனிதம் மிக்க வனப்பகுதியை டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான மரங்கள், தனித்துவ அம்சங்களுடைய பறவைகள் சரணாலயம், பட்டாம்பூச்சித் தோட்டம், தாவரவியல் பூங்கா, கரிம உர மையம், 18 நன்னீர் குளங்களுடன் பசுமை படர்ந்ததாக அமைந்திருக்கிறது இந்த வனம். எறும்புத் தின்ணி, தேவாங்கு , காட்டுக்கோழி, மங்கூஸ், பனை அணில், உடும்பு, நன்னீா் ஆமைகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான உயிரினங்களின் பசுமை இல்லமாக இது இருந்து வருகிறது.
இந்த 'சேக்ரட் ஃபாரஸ்ட்' இந்தியன் கிரே ஹார்ன்பில், புள்ளி கூழைக்கடா, பழுப்பு நிற கொக்கு, புள்ளி வாத்து போன்ற பல நீர்ப்பறவைகளுக்கான இனப்பெருக்க நிலமாகவாகவும் இருந்து வருகிறது. மேலும், குறைந்துவரும் அரிய விலங்கினங்களான சாம்பல் நிற இந்திய எறும்புண்ணி, சாம்பல் நிற தேவாங்கு ஆகியனவும் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இங்கு வலுவான குறு வாழ்விட வனப்பகுதியை உருவாக்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டிருந்திருக்கின்றன. அந்நிறுவனத்தினரின் அந்தத் தொடர் முயற்சியால் தற்போது இந்த வனப்பகுதி இந்தளவுக்கு உருவாகியுள்ளது.
தொழிற்சாலைகள் பெருகிவரும் இந்த காலக்கட்டத்தில், வன உயரினங்கள் மீது அன்புகொண்டு அரவணைக்கும் பணியை மேற்கொண்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தின் முயற்சிக்கு, இயற்கை ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
பசுமை நிறைந்த, இயற்கைச் சூழல் மிகுந்த இந்த வனப்பகுதி, ஆயிரக்கணக்கான மரங்கள், தனித்துவமான அம்சங்களுடைய பறவைகள் சரணாலயம், பட்டாம்பூச்சித் தோட்டம், தாவரவியல் பூங்கா, கரிம உர மையம், 18 நன்னீா்க் குளங்களுடன் பசுமை படா்ந்ததாக அமைந்திருக்கிறது.
இந்த வனப்பகுதி தற்போது 400க்கும் மேற்பட்ட வகையான தாவரங்களும், 100க்கும் மேற்ப்பட்ட வகையான விலங்குகளும் வாழ்வதற்கான இயற்கை வாழ்விடமாகவும், வண்ண நாரைகளுக்கான இனப்பெருக்க காலனியாகவும், தனித்துவம் மிக்க பறவை சரணாலயமாகவும் திகழ்கிறது.
ஒசூரில் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி வகிக்கும் மோட்டார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சரணாலயம் வண்ண நாரைகளின் இனப்பெருக்க காலனிகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெலிகன் பறவைகளை ஈா்க்கும் புதிய நீா் வாழ்விடத்தையும் இந்த வனப்பகுதி கொண்டுள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளின் பசி தீா்க்கும் வகையில் நாவல், அத்தி, மா, பாதாம், நெல்லி, கொய்யா போன்ற பழ மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு முழுநேர இயற்கை ஆா்வலா் இங்குள்ள நீா்நிலைகள், வனப்பகுதிகளை அன்றாடம் மேற்பார்வையிட்டு வருகிறார். அதே நேரத்தில் இயற்கை மண்டலத்தின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்த வல்லுநா்களிடம் தொடா் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு நம் நாட்டைச் சோ்ந்த பூா்வீக தாவர இனங்களை வளா்ப்பதை தொடா்ந்து மேற்கொண்டு வருவதோடு, இந்த வனப்பகுதியின் இயற்கைச் சூழலை மேம்படுத்த குளங்களில் தண்ணீா் எப்பொழுதும் இருக்கும் வகையில் அதன் விநியோகத்தை தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.
அதேசமயம், மண்ணில் கூடுதல் நீா்ப்பிடிப்பு இருப்பதற்காகவும், சில குறிப்பிட்ட வகை பறவைகளை ஈா்ப்பதற்காகவும் புதிய குளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாசி படா்தல், நீரில் ஆக்சிஜன் அளவு குறைவதைத் தடுக்க இந்தக் குளங்கள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகின்றன.
நன்னீா்க்குளங்களில் கரைந்திருக்கும் ஆக்சிஜனின் அளவைப் பராமரிக்க, நீருக்கான காற்றோட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. மீன், நத்தைகள் போன்ற விலங்குகளுக்கான இரை, இங்கு வரும் பறவைகளுக்குப் பயனளிக்கும் வகையில் குளங்களுக்குள் இடப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் நிறுவனம் சார்பில் இந்த வனப்பகுதியின் பசுமைப் போர்வையை மேம்படுத்தவும், அதிக பறவைகளையும் விலங்குகளையும் ஈா்க்கவும், சுற்றுச்சூழல் அமைப்பை பசுமையாக வைத்திருக்கவும் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பராமரிப்பு துணைத்தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
- ம.ஜெகன்நாத்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்