ஆப்கானிஸ்தானில் தாங்கள் கைப்பற்றி வரும் பகுதிகளில் தலிபான்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் நேற்று கைப்பற்றி, அங்குள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்களை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர். அதே போல் தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து, அங்குள்ள அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, தாங்கள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெண்களை தலிபான்கள் குழு கட்டாய திருமணம் செய்துவருவதாக அமெரிக்க ஊடகமான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' கூறியுள்ளதாக ஏஎன்ஐ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், 'திருமணமாகாத பெண்களை கட்டாயப்படுத்தி தங்கள் குழுவிலுள்ள ஆண்களுக்கு மனைவிகளாக கட்டாயப்படுத்தி மாற்றி வருகின்றன. இது பாலியல் வன்முறையின் ஒரு வடிவம் என்று மனித உரிமை குழுக்கள் கூறி வருகின்றன' என்று கூறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், தலிபான்களால் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பிடிபட்ட அரசுப் படை வீரர்களுக்கு மரண தண்டனை அளித்து வருவதுடன், அங்குள்ள பொதுமக்கள் மீது தலிபான்கள் தாக்குதல்கள் நடத்துவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அந்தப் பகுதிகளில் மக்கள் முன் தோன்றும் தலிபான்கள், நாட்டின் மிகப்பெரிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், 'தலிபான்கள் வெற்றிபெற வேண்டும்' என்று கோஷம் போடவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், சரணடைந்த ஆப்கானிஸ்தான் ராணுவ உறுப்பினர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. " இது போர்க்குற்றங்களை உருவாக்கும்" என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக நகரங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும், அதற்கு பதிலாக அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்திருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்