முன்னராக, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஒருமாதகால பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார் பேரறிவாளன். ‘கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் பேரறிவாளனுக்கு, சிறைகளில் பரவும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட விடுப்பு வழங்கவேண்டும்’ என அவரின் தாய் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து, அவருக்கு மே 28 தேதி முதல் ஒரு மாதகாலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பரோல் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார் பேரறிவாளன்.
பரோல் காலம் முடிவடைந்த பின், கடந்த மாத இறுதியில் (ஜூன் 28) பேரறிவாளனுக்கு அவரின் பரோல் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் காரணமாக அவர் தற்போது தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2VxkS8tமுன்னராக, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஒருமாதகால பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார் பேரறிவாளன். ‘கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் பேரறிவாளனுக்கு, சிறைகளில் பரவும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட விடுப்பு வழங்கவேண்டும்’ என அவரின் தாய் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து, அவருக்கு மே 28 தேதி முதல் ஒரு மாதகாலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பரோல் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார் பேரறிவாளன்.
பரோல் காலம் முடிவடைந்த பின், கடந்த மாத இறுதியில் (ஜூன் 28) பேரறிவாளனுக்கு அவரின் பரோல் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் காரணமாக அவர் தற்போது தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்