சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த இளைஞரொருவர் ஆன்லைனில் சட்டைகளை ஆர்டர் செய்திருக்கிறோம். அதில் அவருக்கு கிழிந்த சட்டைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விக்னேஷ் என்ற கட்டடப் பொறியாளர் யூடியூப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து 799 ரூபாய்க்கு 3 சட்டைகளை ஆர்டர் செய்துள்ளார். ஒரு வாரம் கழித்து சட்டைகள் அடங்கிய பார்சல் வந்த நிலையில், அதனைப் பிரித்துப் பார்த்த அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அதில் கிழிந்து சாயம் போன பழைய சட்டை இருந்துள்ளது. இதனால் விக்னேஷ் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.
பார்சலை டெலிவரி செய்த கூரியர் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசியபோது, பிரிக்கப்பட்டுவிட்டதால் அதனை திருப்பி எடுக்க முடியாது என்று உறுதிபடக் கூறிவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்திய அந்த இளைஞர், சட்டைகளை திருப்பி அனுப்பலாம் என முடிவெடுத்து, அதற்கான வழிமுறைகள் உள்ளதா எனத் தேடியபோது அதுவும் இல்லை.
இதன்பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என தொலைபேசி எண்ணை தேடியபோது அது வலைதளப்பக்கத்தில் இல்லாததால், அடுத்த என்ன செய்வது எனத்தெரியாமல் விழிபிதுங்கி தவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர்களது நண்பர்களை தொடர்பு கொண்டபோது இது போன்ற பல மோசடிகள் நடைபெறுவதாகவும் தாங்களும் இதுபோன்று சில பொருட்களை வாங்கி ஏமாந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர் சட்டை வாங்கிய தளமான Peterstrew.com சென்று அதனுடைய சைட் பேஜில் பார்த்தபோது, வடநாட்டில் இருந்து பலரும் இப்படியான குற்றசாட்டினை கமெண்ட்ஸ் செக்ஷனில் தெரிவித்திருந்தது தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்