கொரோனா பரவல் தடுப்பு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளில் மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அலட்சியப்படுத்தி வருவதால், மூன்றாம் அலை தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். நிலைமையை எதிர்கொள்வது குறித்து, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாயன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்