கொரோனா பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், அடுத்தடுத்த தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம், வரும் 18-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர், பொதுமுடக்கத்தை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார்.
கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரம் அதிகரிக்கப்படலாம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்