உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 7 குழந்தைகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேர் வரை உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல் தாக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்