Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

திருச்சி: மாற்றுத்திறனாளி மகனுக்காக 12 ஆண்டுகளாக மனு அளிக்கும் தாய்-இனியாவது உதவுமா அரசு?

https://ift.tt/3wxjZt1

திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்க உரிய வசதிகள் செய்துதர வேண்டுமெனக்கூறி, மூதாட்டியொருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துக்கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தனது மனுவுக்கு நடவடிக்கை இல்லாததால், இம்முறை மனுவை பெட்டியில் போடமாட்டேன் எனக்கூறி கையிலேயே மனுவை வைத்துக்கொண்டு அப்பகுதியிலேயே வெகுநேரம் அவர் காத்திருந்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்தவர் பேபி கமலா. கணவர் இறந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தன் மகனை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்ல இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார் பேபி கமலா.

image

இவருடைய மகன் சுதாகருக்கு, இப்போது 37 வயதாகிறது. மாற்றுத்திறனாளியான சுதாகருக்கு கை மற்றும் கால்கள் சரிவர செயல்படாது. இதனால் அவர் பள்ளி சென்று படிக்கவும் முடியாத நிலை இருந்துள்ளது. சுதாகர் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாததால், தற்போது வேலைக்கும் செல்ல முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை முன்னிறுத்தி, 70 சதவீதம் உடல் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனுக்கு அரசு வழங்கும் ‘மாற்றுத்திறனாளி உதவித்தொகையை பெற்றுத் தர வேண்டும் அல்லது வேலைவாய்ப்புக்கு வழிவகுக்க வேண்டும்’ என திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வந்துள்ளார் பேபி கமலா.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒவ்வொரு முறையும் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஒவ்வொரு அலுவலகமாக சென்று மனு அளித்து வரும் தனக்கு இன்றுவரை எந்த ஒரு பலனும், பதிலும் கிடைக்கவில்லை என வேதனையுடன் கூறுகிறார் பேபி கமலா.

image

அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டாலும், தனது உரிமையை தொடர்ந்து கேட்க வேண்டும் என்று நினைத்த பேபி கமலா இன்றும் தனது மனுவுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். ஆனால் இம்முறை  தனது மனுவை பெட்டியில் போடமுடியாதென கூறி, அப்பகுதியிலேயே நிற்கத்தொடங்கிவிட்டார். இதைக்கண்ட அங்கிருந்த அதிகாரிகள் அவரை மனுவை பெட்டியில் போட தெரிவித்தும், முடியாது என மறுத்துவிட்டார் அவர்.

இதுகுறித்து நம்மிடையே கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இம்முறை என் மனுவை பெட்டியில் போடபோவதில்லை. பெட்டியில் போடும் மனுக்கள் குப்பைத் தொட்டிக்கு தான் செல்லும்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

image

தொடர்ந்து அதிகாரிகள் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தன்னுடைய மனுவை பெட்டியில் போட்டு விட்டு இம்முறையாவது ஏதாவது பதில் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடன் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திரும்பிச் சென்றார் பேபி கமலா.

மாற்றுத் திறனாளி மகனை வைத்துக்கொண்டு சிரமப்படும் தனது நிலையை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவருடைய ஒற்றை கோரிக்கையாக உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாற்றுத்திறனாளிகளுக்கான துறைசார்ந்த அலுவலர்களும் இம்முறையாவது பேபி கமலாவின் மனுமீது நடவடிக்கை எடுப்பார்களா, விரைந்து அது மேற்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- பிருந்தா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்