Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சவுத்தாம்டனில் பயிற்சி போட்டி: ஜடேஜா, ரிஷப் பன்ட் அசத்தல் பேட்டிங்; வீடியோ வெளியீடு

https://ift.tt/3vl5Sqj

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து 3 நாள் பயிற்சி போட்டி விளையாடினார்கள்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று தங்களை 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்பு, தனிமைக்காலம் முடிந்து 2 நாள்களுக்கு முன்பு மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

பொதுவாக சுற்றுப் பயணங்களில் உள்ளூர் அணிகளுடன் பயிற்சி போட்டிகள் நடக்கும். அப்போதுதான் வீரர்களால் மைதானத்தின் நிலை மற்றும் சீதோஷனங்களை அறிந்துக்கொள்ள முடியும். நியூசிலாந்து அணி ஏற்கெனவே இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் அவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் கொரோனா காரணமாக இந்திய அணிக்கு பயிற்சி போட்டி வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் மனம் தளராத இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் இரு அணியாக பிரிந்து 3 நாள் பயிற்சி ஆட்டத்தை விளையாடினர். அதன் வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இதில் 2-ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த் அதிரடி காட்டி 94 பந்துகளில் 121 ரன்கள் விளாசியுள்ளார். பந்துவீச்சில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 3-ம் நாள் ஆட்டத்தில் முகமது சிராஜ் 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா அரை சதம் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை, வீடியோக்களை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்