பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெற்ற ஜோகோவிச் தான் விளையாடிய ராக்கெட்டை கேலரியில் இருந்த சிறுவனுக்கு கொடுக்க, அதை வாங்கிய பின் சிறுவன் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச். அடுத்த மூன்று செட்களை 6 - 3, 6 - 2, 6 - 4 என கைபற்றி ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவர் வென்றுள்ள 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இது பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.
Novak Djokovic gifted away his racket to a young fan after winning the French Open.
— Sporting News (@sportingnews) June 13, 2021
His reaction was priceless. pic.twitter.com/HIFq9luRYN
இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிப் பெற்ற ஜோகோவிச், தான் மைதானத்தில் இருந்து செல்லும் முன்பு கேலரியில் இருக்கும் சிறுவனை பார்த்தார். அந்தச் சிறுவன் ஜோகோவிச்சின் தீவிர ரசிகன். கேலரியின் அருகே சென்ற ஜோகோவிச் அவர் விளையாடிய டென்னிஸ் ராக்கெட்டை அந்தச் சிறுவனக்கு பரிசலித்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்தச் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். அதுவும் சிறுவன் முகத்தை வெளிப்படுத்திய உணர்ச்சிகள் கண்கொள்ளா காட்சி. இப்போது இவை வரைலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்