Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்குமா?- இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

https://ift.tt/3x0pMIM

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12ஆவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை வகிக்கிறார். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகா வழங்குவதை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உள்ளது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேகதாது அணை திட்ட விவகாரம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்