Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

38 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கபில் தேவ் முத்தமிட்ட உலகக் கோப்பை!

உலகக் கோப்பை என்றாலே 2011 இல் "லாங் ஆன்" திசையில் தோனி அடித்த சிக்ஸரும், இந்தியா வென்ற உலகக் கோப்பையும் இப்போதுள்ள தலைமுறைக்கு தெரியும். ஆனால் இதே நாளில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்தது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அப்போது வைக்கப்பட்ட செல்லப் பெயர் "கபில்ஸ் டெவில்ஸ்".

image

1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு என முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, சிறிய அணியான இந்தியாவிடம் தனது சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது. 1983 ஆம் ஆண்டு புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில் இரட்டை ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்றன.

image

1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை முற்றிலும் எதிர்பாராத விதமான முடிவுகளை அளித்தது. இதிலும் 60 ஓவர் அடிப்படையிலேயே போட்டி நடத்தப்பட்டது. 15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கையும், பி பிரிவில் மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன. இந்தியா தனது லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 31 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்திலும், வென்றது.

image

இதனையடுத்து அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றன. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொன்னது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணியில் ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர்.

image

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப்பெற்றுவிடும் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் இந்திய பவுலர்கள் மிக திறமையாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் முதலாக உலக் கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட்டார் கபில் தேவ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3gWjS5G

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்